வியாழன், 19 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2024 (14:43 IST)

நான் தேசிய விருதுக்கு தகுதியற்றவளா?... நித்யா மேனன் ஆவேச பதில்!

கடந்த ஆகஸ்ட் மாதம் 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்துக்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது அளிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.

ஆனால் நித்யா மேனனை விட கார்கி படத்தில் நடித்த சாய்பல்லவிக்குதான் தேசிய விருது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என சிலர் சமூகவலைதளங்களில் விமர்சனங்களை வைக்கத் தொடங்கினர்.  ஏனென்றால் திருச்சிற்றம்பலம் படத்தில் நித்யா மேனனின் நடிப்பு ஒன்றும் சிலாகித்து சொல்லும் அளவுக்கானது இல்லை என்றும் ஆனால் கார்கி படத்தில் சாய்பல்லவி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள அவர் “தேசிய விருதுக்கு தகுதியான நடிப்பை நான் கொடுத்துள்ளதால்தான் எனக்கு அவ்விருது கொடுக்கப்பட்டுள்ளது. அழுவது மற்றும் சோகமாக இருப்பது மாதிரி யார் வேண்டுமானாலும் நடிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.