1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 17 ஜூலை 2017 (14:53 IST)

நடிகரால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி நடிகராலே அழியப்போகிறது; கமலுக்கு ஆதரவாக கொந்தளித்த நெட்டிசன்கள்

நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் மீம்ஸ் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 

 
நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக கூறினார். இதற்கு சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் கமல்ஹாசனுக்கு எதிராக தக்களது கருத்தை தெரிவித்தனர். 
 
அதேநேரம் ஓபிஎஸ் அணி அமைச்சர்கள் மற்றும் திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் ஆகியோர் கமலுக்கு ஆதரவாக தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் கமலுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர். 
 
சமூக வலைதளமான டுவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் மீம்ஸ் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ஒரு நடிகரால் ஆரம்பிக்கப்பட்டு ஒரு நடிகையால் வளர்க்கப்பட்ட ஒரு கட்சி ஒரு நடிகராலே அழியப்போகிறது என பதிவிட்டுள்ளார்.
 
மேலும் கமல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக போராடிய செய்திக்கொண்ட புகைப்படம் மற்றும் பாரதிராஜா கமல் பற்றி கூறியது ஆகியவற்றை பதிவிட்டுள்ளனர்.