1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (08:23 IST)

கேரள நிவாரண நிதி; விமர்சனத்துக்கு உள்ளான ரஜினி!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ள சேதத்துக்கு  நடிகர்–நடிகைகள், பட அதிபர்கள், டைரக்டர்கள் மனமுவந்து  நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள்.

 
டைரக்டர் ‌ஷங்கர் ரூ.10 லட்சம் உதவி தொகையை, ‘ஆன் லைன்’ மூலம் நேற்று அனுப்பி வைத்தார். நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சம் வழங்கியிருக்கிறார்.
 
நடிகர் ரஜினிகாந்த் ரூ.15லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார். பிரபாஸ், விஜய் சேதுபதி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட வளரும் நடிகர்களே பெரிய அளவில் பணம் வழங்கியுள்ள நிலையில், இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினி பெரும் வெள்ளத்துக்கு ரூ.15லட்சம் வழங்கியிருப்பதை விமர்சித்து சமூகவலைதளங்களில் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.