ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2023 (09:39 IST)

பீஸ்ட் 2 வுக்கும் திட்டம் வைத்திருக்கிறாராம் நெல்சன்… முழிபிதுங்கும் ரசிகர்கள்!

பீஸ்ட் படத்துக்குக் கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து இயக்குனர் நெல்சன் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது அவரின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகி 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நெல்சன் “ஜெயிலர் 2 உருவாக்கும் திட்டம் உள்ளது. அதுமட்டுமில்லை, நான் இயக்கிய பீஸ்ட் மற்றும் டாக்டர் படங்களுக்கும் செகண்ட் பார்ட் உருவாக்கும் எண்ணம் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதில் அவரைக் கடுமையாக விமர்சிக்க காரணமாக இருந்த பீஸ்ட் படத்தையும் இணைத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் அமைந்துள்ளது.