வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:56 IST)

நெல்சனின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்… சம்பளம் இத்தனைக் கோடியா?

கடந்த ஆண்டு வெளியான பீஸ்ட் படத்துக்குக் கடுமையான விமர்சனங்கள் வந்ததையடுத்து இயக்குனர் நெல்சன் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். அதனால் ஜெயிலர் படத்தில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்றே பேசப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் ஜெயிலர் படத்தை இயக்கி முடித்தார் நெல்சன். இப்போது அவரின் ஜெயிலர் திரைப்படம் ரிலீஸாகி 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்களின் பட்டியலில்  ஜெயிலர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நெல்சன் இயக்கும் அடுத்த படத்தையும் சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படத்துக்காக நெல்சனுக்கு 55 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.