1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:11 IST)

நெல்சன் தான் இயக்குனர்: ரஜினிகாந்த் உறுதி செய்ததாக தகவல்!

Nelson
தலைவர் 169 படத்தின் இயக்குனர் நெல்சன் தான் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
பீஸ்ட் படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஜினிகாந்த் ’தலைவர் 169’ படத்தின் இயக்குனரை மாற்றவுள்ளதாக தங்களை தாங்களே பத்திரிக்கையாளர்கள் என்று கூறிக்கொண்டு திரியும் ஒரு சிலர் வதந்தியை கிளப்பி வந்தனர்
 
மேலும் தலைவர் 169 படத்தின் இயக்குனர் அட்லி அல்லது தேசிங்கு பெரியசாமி இயக்குவரகள்  என்றும் கூறிவந்தனர் 
 
இந்த நிலையில் தலைவர் 169 படத்தின் இயக்குனர் ஏற்கனவே முடிவு செய்தபடி நெல்சன் தான் என்றும் அவர் தனது பணிகளை தொடரலாம் என ரஜினிகாந்த் கூறி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ரஜினிகாந்த், நெல்சன், அனிருத், சன்பிக்சர்ஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது