பிக்பாஸ் வீட்டில் ஒரு 'நீயா நானா? நிகழ்ச்சி!

Last Modified புதன், 17 ஜூலை 2019 (09:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே 'நீயா நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் உள்ள க்ளினீங் டீம் கடமை உணர்வோடு வேலை செய்கிறார்கள், பாசாங்கு செய்கிறார்கள் என்பதுதான் இந்த நீயா நானா? நிகழ்ச்சியின் தலைப்பு
இந்த தலைப்பில் தர்ஷன் தலைமையில் ஒரு டீமும், சரவணன் தலைமையில் ஒரு டீமும் வாதாடுகின்றனர். தர்ஷனும், சரவணனும் ஆவேசமாக பேசினாலும் கடைசியில் இருவரும் மீராவை கலாய்க்கும் வகையில் பேச, இதனால் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே சிரிப்பலைகள் எழுகின்றன. இதனால் மீரா, 'அமைதி, அமைதி' என்று கூறுவதோடு இந்த புரமோ வீடியோ முடிவடைகிறது. இதனை வைத்து பார்க்கும்போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி கலகலப்பாக இருக்கும் என தெரிகிறது


இதில் மேலும் படிக்கவும் :