செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (10:53 IST)

நயன்தாரா நடிக்கும் மண்ணாங்கட்டி… டைட்டிலோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்துக்குப் பின்னர் நடித்த படங்கள் எதுவும் ஹிட்டாகவில்லை. இந்நிலையில் இப்போது புதிதாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.  இந்த படத்தை சர்தார் உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் நயன்தாராவோடு யோகி பாபு, தேவதர்ஷினி மற்றும் நரேந்திர பிரசாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை பிளாக்‌ஷீப் யுட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கிய ட்யூட் விக்கி இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். மதன் படத் தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.