1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 30 செப்டம்பர் 2016 (17:51 IST)

கடுப்பின் உச்சத்தில் அதர்வா: நயன்தாராவா காரணம்?

அதர்வா படம் நயன்தாரா படமாக மாறியதால், அதர்வா நயன்தாரா மீது கடுப்பில் உள்ளாராம். 

 
டிமாண்டி காலனி படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நேரத்தில் அந்த பட இயக்குநர் அஜய் ஞானமுத்துவை அழைத்து கதை கேட்டவர் அதர்வா. அஜய் கூறிய கதை பிடித்துப் போக, படத்தை ஒப்புக்கொண்டார்.
 
இந்த, படத்தில் துப்பறியும் போலீஸ் கதாபாத்திரம் வெயிட்டான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்திற்கு பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அஜய் இறுதியில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்தார்.
 
நயன்தாராவை ஒப்பந்தம் செய்த பிறகு அதர்வாவின் படம் என்பதற்கு பதிலாக நயன்தாரா படம் என்று கூறப்படுகிறது. இதை கேட்டு ஹீரோவான அதர்வா கடுப்பில் உள்ளாராம்.