1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : சனி, 29 ஏப்ரல் 2017 (13:09 IST)

நயன்தாராவை ஒரு பெண்ணாகவே பார்க்க முடியவில்லை - எழுத்தாளர் ஓபன் டாக்

நடிகை நயன்தாரா பற்றி பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தற்போது அவர் லேடி சூப்பர்ஸ்டார் என திரையுலகில் அழைக்கிறார்கள்.  
 
இந்நிலையில், கிடாரி உட்பட சில தமிழ் படங்களில் நடித்துள்ள எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, ஒரு இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது, நயன்தாரா நடித்து விரைவில் வெளியாகவுள்ள அறம் படத்தில், தான் வில்லனாக நடித்திருப்பது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
 
நயன்தாராவிடம் 4 ஆண்களின் கம்பீரம் இருக்கிறது. அவரை பெண்ணாகவே என்னை பார்க்க முடியவில்லை. அவரிடம் அப்படி ஒரு தெளிவு, கம்பீரம் இருக்கிறது. அவர் மிகச்சிறந்த பெண் கலைஞர்” என நயனை புகழ்ந்து பேசியுள்ளார்.