வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (15:13 IST)

நயன்தாரா விக்னேஷ் சிவன் திடீர் நிச்சயதார்த்தம் – பின்னணி என்ன?

நடிகை நயன்தாராவின் நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் சொந்த பிரச்சனைகள் பல சந்தித்து வேதனைகள் கடந்து இந்த வெற்றிடத்தை பிடித்துள்ளார். இன்று அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அவரை குறித்து ஏதேனும் செய்திகள் வெளியாகினால் அது வைரலாகிறது. இந்நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரமோஷனில் கலந்துகொண்ட நயன்தாரா தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக கூறியுள்ளார்.

இதுபற்றிய பின்னணி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில் நயன்தாராவின் தந்தை உடல்நலம் சரியில்லாமல் இருப்பதால் அவரின் வேண்டுகோளுக்கு இணங்கியே நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தத்தை முடித்துக் கொண்டுள்ளாராம்.