வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2023 (15:34 IST)

இரட்டை குழந்தைகளுக்கு ஆபத்தா? பாவம் நயன்தாரா... பரிகார பூஜைக்கு கோவில் கோவிலா சுற்றும் விக்கி!

பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்கள் முன்னதாக திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆன சில மாதங்களிலேயே இரட்டை குழந்தை பெற்றனர். 
 
குழந்தைகளுக்கு  'உயிர் ருத்ரோநீல் N சிவன், உலக் தெய்விக் N சிவன்' என குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். இந்நிலையில் தபோது  விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் தன் குலதெய்வ கோவிலான  கும்பகோணத்தில் இருக்கும் வளத்தூர் ஆற்றங்கரை ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் திருகோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர். 
 
இன்று பங்குனி உத்திரம் என்பதால் தொழில் மற்றும் குடும்ப ரீதியான சறுக்கல்களை போக்க குல தெய்வ வழிபாடு செய்து பரிகாரம் செய்ய சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பூஜைக்கு தங்களின் இரட்டை குழந்தைகள் அழைத்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.