சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 19 ஆகஸ்ட் 2016 (11:52 IST)

நயன்தாராவின் திருநாள் ஏமாற்றத்தை சமன் செய்த பாபு பங்காரம்

நயன்தாராவின் திருநாள் ஏமாற்றத்தை சமன் செய்த பாபு பங்காரம்

நயன்தாரா நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகி வந்த நிலையில் திருநாள் படம் மட்டும் தோல்வி அடைந்தது. அந்த ஏமாற்றத்தை சமன் செய்துள்ளது பாபு பங்காரம்.

 

 
 
பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா நடித்த தெலுங்குப் படம் பாபு பங்காரம். வெங்கடேஷ் ஹீரோ. இந்தப் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. மேலும், ஒரு பாடல் காட்சியில் நடிக்க மறுத்தார் எனவும் கூறப்பட்டது. இந்த வதந்திகளை படத்தின் தயாரிப்பாளர் நாகா வம்சி மறுத்தார். நயன்தாரா ரொம்பவும் ஒத்துழைப்பு தந்தார், தேதிகளை அட்ஜஸ்ட் செய்தார் என்று பாராட்டினார் அவர். 
 
இந்நிலையில், கடந்த 12 -ஆம் தேதி பாபு பங்காரம் வெளியானது. தமிழில் செல்வி என்ற பெயரில் டப் செய்து வெளியிட்டனர். ஒருவாரம் கடந்த நிலையில், படம் சூப்பர்ஹிட் என்று அறிவித்துள்ளார் நாகா வம்சி. முதல் வார இறுதியில் படம் 25 கோடிகளை வசூலித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
 
நயன்தாராவை பொறுத்தவரை திருநாள் தோல்வியை பாபு பங்காரத்தின் வெற்றி சமன் செய்துள்ளது.