நயன்தாராவுக்கு பெரிய குழந்தை, அமலா பாலுக்கு சின்ன குழந்தை

Sasikala| Last Modified செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (10:52 IST)
நயன்தாராவுக்கு மகளாக வளர்ந்த சிறுமியை நடிக்க வைத்த இயக்குனர் சித்திக், அமலா பாலுக்கு வளரும் குழந்தையை  மகளாக்கியிருக்கிறார்.

 
மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் இயக்கிய பாஸ்கர் தி ராஸ்கல் படத்தை இயக்குனர் சித்திக் தமிழில் ரீமேக்  செய்கிறார். மம்முட்டி வேடத்தில் அரவிந்த்சாமியும், நயன்தாரா வேடத்தில் அமலா பாலும் நடிக்கின்றனர்.
 
மம்முட்டி, நயன்தாரா இருவரும் சிங்கிள் பேரன்ட். மம்முட்டியின் மகனும், நயன்தாராவின் மகளும் படிப்பது ஒரே பள்ளியில்.  மம்முட்டி மகனுக்கு நயன்தாரா மீது கொள்ளை ப்ரியம், நயன்தாரா மகளுக்கு மம்முட்டியிடம். குழந்தைகளின் இந்தப் பாசம் மம்முட்டி, நயன்தாராவை இணைப்பதுதான் கதை.
 
நயன்தாராவின் மகளாக சற்று வளர்ந்த சிறுமியை நடிக்க வைத்த சித்திக், அமலா பாலுக்கு மகளாக மீனாவின் மகள் நைனிகாவை தேர்வு செய்துள்ளார். அமலா பாலின் வயதை கணக்கில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :