செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2021 (16:27 IST)

மூக்குத்தி அம்மன் கதையில் நடிக்க இருந்த இரு கதாநாயகிகள் – ஆனால் நயன்தாரா வந்தது எப்படி?

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா நடிப்பதற்கு முன்னால் இரு கதாநாயகிகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்ததாக ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளியை முன்னிட்டுதில் ஓடிடியில் ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியான இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் நயன்தாராதான் என்றால் அது மிகையாகாது.

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இப்போது படத்தைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றைக் கூறியுள்ளார். அதன் படி ‘அம்மன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானவர் நயன்தாரா இல்லையாம். கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனிடம் கதையை சொல்லி அவரும் சம்மதம் தெரிவித்திருந்தாராம். ஆனால் நட்பின் அடிப்படையில் நயன்தாராவிடம் இந்த கதையை சொல்ல உடனடியாக நடிக்க சம்மதம் தெரிவித்தாராம் நயன்தாரா. ஆனால் அதற்கு முன்னதாக கதை எழுதும் போதே அனுஷ்காதான் அம்மன் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக இருப்பார் என்று நினைத்ததாகவும் கூறியுள்ளார்.