#NationalCrushRashmika: திடீர் டிரெண்டின் பின்னணி என்ன??
சமூக வலைத்தளமான டிவிட்டரில் #NationalCrushRashmika என்ர ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படங்களில் நடித்து வந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த இரண்டு படங்களுக்கு பின்னர் மொழி எல்லையை தாண்டி மக்கள் மனதில் இடம்பெற்றார்.
இப்போது கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளமான டிவிட்டரில் #NationalCrushRashmika என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால் கூகுளில் National Crush of India 2020 என தேடினால் ராஷ்மிகாவின் பெயர் வருகிறது. இதனால் #NationalCrushRashmika ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இது குறித்து தனது மகிழ்ச்சியை தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ரஷ்மிகா. அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு...