1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 21 மே 2021 (21:19 IST)

ஒல்லி ஒல்லி இடுப்பு.... ஹன்சிகா லெவலுக்கு திடீர்னு ஒல்லியான குமுதா!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார்.

தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது படு ஒல்லியாகி கட்டான ஷேப்பிற்கு மாறியுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ஹன்சிகா ரேஞ்சிற்கு ஒல்லியாகியுள்ள குமுதாவை பார்த்து எல்லோரும் ஒரு நிமிடம் வாயடைத்து விட்டனர்.