செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 7 அக்டோபர் 2020 (19:31 IST)

பிக்பாஸ் ஒரு கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ இல்லை: முன்னாள் போட்டியாளர்!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோக்கள் கூட டுவிட்டரில் வைரலாகி வருகிறது என்பதும் கடந்த 3 சீசன்களை விட இந்த சீசன் மிகப்பெரிய வெற்றியை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ஏற்கனவே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் என்று சிலர் சர்ச்சைக்குரிய தகவலை தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது ஒரு கேம் ஷோ தான் என்றும், ரியாலிட்டி ஷோ அல்ல என்றும் இந்த ஷோவில் ரியாலிட்டியும் இல்லை நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
 
பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை நமீதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரியாலிட்டி இல்லை என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது