சிவகார்த்திகேயனை இப்படி அழ வச்சிட்டாரே நக்கீரன் கோபால்
மேடையில் பொசுக்கென்று அழும் நடிகர் யார் என்று கேட்டால் எல்.கே.ஜி குழந்தை கூட சொல்லிவிடும் அது சிவகார்த்திகேயன் தான் என்று. அந்த அளவுக்கு சிவகார்த்திகேயன் எளிதில் உணர்ச்சி வசப்பட்டுவிடுவார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் வீட்டுக்கே சென்று அவரை அழ வைத்த பெருமை சமீபத்தில் நக்கீரன் கோபலுக்கு சென்றுள்ளது.
மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சிவகார்த்திகேயன் வீட்டுக்கு சென்றுள்ளார் நக்கீரன் கோபால். அழைப்பிதழை கொடுத்து விட்டு அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக சிவகார்த்திகேயனின் அப்பா போட்டோவை பார்த்துள்ளார். உடனே நீங்க இவருடைய மகனா? உங்க அப்பாவை எனக்கு ரொம்ப தெரியுமே என்று அவரை பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் நக்கீரன்.
தந்தையின் பெருமைகளை கேட்டு ஆனந்தக்கண்ணீர் விட்டாராம் சிவகார்த்திகேயன். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பட விழாவில் கூறி அங்கும் கண்ணீர் சிந்தியுள்ளார் சிவகார்த்திகேயன். தன்னுடைய அப்பாவை எப்படியெல்லாம் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று தான் கனவு கண்டதாகவும், இன்று கோடிக்கணக்கில் பணம் இருந்தும் அவர் உயிரோடு இல்லாததால் தனது கனவு நிறைவேறாமல் போய்விட்டதாகவும் சிவகார்த்திகேயன் கூறியபோது அனைவரின் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது என்னவோ உண்மைதான்.