செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (22:19 IST)

மீண்டும் நாக சைதன்யாவுடன் ஜோடிபோட்ட ரகுல் ப்ரீத்சிங்

நாக சைதன்யா ஜோடியாக மீண்டும் ஒரு தெலுங்குப் படத்தில் கமிட்டாகியுள்ளார் ரகுல் ப்ரீத்சிங்.
 
நாக சைதன்யா நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘ரரண்டோய் வெடுக சுதம்’. கல்யாண் கிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில், நாக சைதன்யா ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடித்திருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
 
இந்நிலையில், மறுபடியும் நாக சைதன்யா ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ரகுல் ப்ரீத்சிங். இந்தப் படத்தை, செளஜன்யா இயக்குகிறார். இயக்குநர் கிருஷ்ண வம்சியிடம் உதவியாளராக இருந்த இவர் இயக்க இருக்கும் முதல் படம் இது. மே மாத இறுதியில் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.