செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 4 பிப்ரவரி 2022 (16:39 IST)

இசையமைப்பாளர் ஆகிறாரா மிஷ்கின்? ஆச்சர்யத் தகவல்!

இயக்குனரும் நடிகருமான மிஷ்கின் அடுத்து இசையமைப்பாளர் அவதாரம் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார். மிஷ்கினின் படங்களில் எப்போதும் பின்னணி இசையும் பாடல்களும் பேசுபொருளாக இருக்கும். அது இளையராஜா இசை அமைத்ததாக இருந்தாலும், அறிமுக இசையமைப்பாளராக இருந்தாலும் சரி. அந்த அளவுக்கு இசையில் ஈடுபாடு கொண்டவர் மிஷ்கின்.

இந்நிலையில் இப்பொது அவர் தனது தம்பி இயக்கும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.