செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 31 ஜனவரி 2020 (13:41 IST)

ராமாயணத்தில் லாஜிக்கே இல்லை; மிஷ்கின் பரபரப்பு

மிஷ்கின் இயக்கிய “சைக்கோ’ திரைப்படத்தில் லாஜிக் இல்லை என பலர் விமர்சித்து வருகிற நிலையில், இது குறித்து பேசிய மிஷ்கின், “ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை’ என கூறியுள்ளார்.

மிஷ்கின் இயக்கிய “சைக்கோ” திரைப்படம் சென்ற வாரம் திரைக்கு வந்தது. இத்திரைப்படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், சிலர் லாஜிக்கே இல்லை என விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் வால்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய மிஷ்கின், இந்த விமர்சங்களுக்கு பதிலளித்தார். அதில்,

”ராமாயணத்திலே எந்த லாஜிக்கும் இல்லை, இன்னொருவரின் மனைவியை தூக்கிச் சென்ற மோசமானவனான ராவணனுடன், மனைவியை மீட்க சண்டை போடுகிறான் ராமன். ராவணனும் சண்டை போடுகிறான். விபீஷ்ணன் ராமனோடு இணைகிறான். சாப்பாடு போட்டு தன் உடலை வளர்த்த ராவணனோடு எப்போதும் இருப்பேன் என கும்பகர்ணன் கூறுகிறான். ராமனிடம் சாகப்போவதை தெரிந்துக்கொண்டும் கும்பகர்ணன், அண்ணனுடன் சேர்ந்து மடிந்து போகிறான். இதில் எந்த லாஜிக்கும் இல்லை” என கூறியுள்ளார்.

சைக்கோ திரைப்படத்தில் பல கொலைகளை செய்யும் “சைக்கோ” கதாப்பாத்திரத்தை மன்னிப்பது போல் படம் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.