1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வியாழன், 4 மே 2017 (18:23 IST)

மை டியர் குஞ்சுமணி: த்ரிஷாவை கொஞ்சியதால் ஆர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

மை டியர் குஞ்சுமணி: த்ரிஷாவை கொஞ்சியதால் ஆர்யாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

தமிழ் திரையுலகில் நீண்ட நாட்களாக முன்னணியில் இருக்கும் நடிகைகளில் ஒருவரான த்ரிஷா தனது 33-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு திரை பிரபலங்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.


 
 
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பீட்டா அமைப்பில் இருப்பதால் நடிகை த்ரிஷா கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அவரது படப்பிடிப்புகளும் இதனால் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சிறிது காலத்திற்கு பின்னர் தான் த்ரிஷாவுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைத்தது.
 
இந்நிலையில் கோடை வெயில் மற்றும் படப்பிடிப்புகளில் இருந்து ஓய்வு எடுப்பதற்காக நடிகை த்ரிஷா அமெரிக்காவில் உள்ளார். அவர் தனது பிறந்தநாளை அமெரிக்காவில் தனது தாயுடன் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


 


த்ரிஷாவின் நண்பர் நடிகர் ஆர்யா த்ரிஷாவுக்கு தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மை டியர் குஞ்சுமணி ஸ்வீட் ஹார்ட். நீ தான் எப்பவுமே பெஸ்ட் டார்லிங் என கூறியுள்ளார். இதில் அவர் குஞ்சுமணி என்ற வார்த்தையை பயன்படுத்தியதால் அவரை நெட்டிசன்கள் டுவிட்டரில் வறுத்தெடுத்து வருகின்றனர்.