வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 29 மார்ச் 2019 (12:19 IST)

தள்ளிப்போகும் சூப்பர்ஸ்டார் பட ஷூட்டிங்.. சர்கார் சூத்திரத்தை கையிலெடுத்திருக்கும் முருகதாஸ்!!!

ரஜினியை வைத்து படமெடுக்க இருக்கும் இயக்குனர் முருகதாஸ் பழனிக்கு சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார்.
 
பேட்ட படத்துக்குப் பின்னர் ரஜினி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட இருக்கிறது என்று கூறப்படுகிறது. அனிருத் இசைமையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடிப்பார் என்று சொல்கிறார்கள். 
 
படத்தின் ஷூட்டிங் இம்மாத இறுதியிலேயே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தலால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
 
இந்நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளது படக்குழு.  இதற்கிடையே இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று சிறப்பு பிரார்த்தனை செய்துள்ளார். சர்கார் பட பிரச்சனையின் போதும், படம் ரிலீசாவதற்கு முன்னும் முருகதாஸ் கோவிலிக்கு சென்று பிரார்த்தனை செய்தது குறிப்பிடத்தக்கது.