புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Modified: சனி, 29 ஏப்ரல் 2017 (14:47 IST)

மும்பை இல்லையாம்… ஆந்திராவுக்குப் போகும் ரஜினி

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் கடப்பாவில் நடைபெற உள்ளதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

 
 
பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘கபாலி’ படத்தில் நடித்தார் ரஜினி. வயதான கெட்டப்பில் கேங்ஸ்டராக அவர் நடித்திருந்தது, அவர்  ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துவிட்டது. இதனால், பா.இரஞ்சித்தின் அடுத்த படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இந்தப் படத்திலும் வயதான கெட்டப்பிலேயே நடிக்கிறாராம் ரஜினி. நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். 
 
இந்தப் படம் மும்பையைச் சேர்ந்த தாதா ஒருவரின் நிஜக்கதை என்றும், மும்பையில் ‘பாட்ஷா’ படப்பிடிப்பு நடந்த இடத்திலேயே இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவலை  மறுத்தார் பா.இரஞ்சித். தற்போது கிடைத்துள்ள தகவல்படி, ஆந்திர மாநிலம் கடப்பாவில்தான் பெரும்பாலான காட்சிகளை ஷூட் செய்யப் போகிறார்களாம். இதனால், அங்கு செட் போடும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.