செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 26 ஏப்ரல் 2021 (18:48 IST)

முகென் ராவ் நடிக்கும் வேலன் படத்தின் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்!

பிக்பாஸ் மூலமாக பிரபலமான முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்கும் வேலன் என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிறுத்தை சிவாவிடம் உதவியாளராக இருந்தவர் கவின். அவர் இப்போது பிக்பாஸ் பிரபலம் முகேனை வைத்து வேலன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிகர் சூரியும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சூரியின் கதாபாத்திரம் வித்தியாசமாக மலையாளியாக வடிவமைக்கப்பட்டுள்ளதாம். படத்தில் வெறித்தனமாக வரும் மம்மூட்டி ரசிகராக வரும் சூரி தனது பெயரை மம்மூக்கா தினேஷன் என மாற்றி வைத்துக்கொள்வாராம். இந்த படத்தின் சூரியின் கதாபாத்திரம் சிறப்பாக பேசப்படும் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்டுள்ளார்.