1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (13:21 IST)

முடிஞ்சா இவன புடி பாடல்கள் - ஜுலை 20 கமல் வெளியிடுகிறார்

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள, முடிஞ்சா இவன புடி படத்தின் பாடல்களை கமல் வெளியிடுகிறார்.


 
 
கன்னட நடிகர் சுதீப் நடிப்பில் தமிழ், கன்னடத்தில், முடிஞ்சா இவன புடி தயாராகியுள்ளது. நித்யா மேனன் நாயகி. டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்களை ஜுலை 20 -ஆம் தேதி கமல் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 
கமல் தனது சபாஷ் நாயுடு படத்துக்காக தற்போது அமெரிக்காவில் உள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், ஜுலை 20 -ஆம் தேதிக்குள் கமல் தனது சபாஷ் நாயுடு படத்தை முடித்து இந்தியா திரும்புவார் என்பது உறுதியாகியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்