இயக்குனரை மன்னிப்பு கேட்க வைத்த ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ் நடிப்பில் நேற்று வெளியான 'மொட்டசிவா கெட்ட சிவா' படத்தின் டைட்டிலில் மக்கள் சூப்பர் ஸ்டார் ராகவா லாரன்ஸ் என்று காண்பிக்கபட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் கண்டனமும், எதிர்ப்பும் கேலியும் கிண்டலும் கிளம்பிய நிலையில் பதறியடித்த ராகவா உடனே தனக்கு தெரியாமல் இயக்குனர் அந்த பட்டத்தை இணைத்துவிட்டார் என்றும் ரஜினிகாந்த் ஒருவரே சூப்பர் ஸ்டார் என்றும் அறிக்கைவிட்டார்
ராகவா லாரன்ஸ் அறிக்கையையும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். பல மிமிக்கள் மூலம் இந்த விஷயம் குறித்து உருவானது
இந்நிலையில் 'மொட்டசிவா கெட்ட சிவா' இயக்குனர் சாய்ரமணி தற்போது மன்னிப்பு கேட்டு ஒரு கடிதத்தை ரிலீஸ் செய்துள்ளார் அவர் அந்த கடிதத்தில் கூறியதாவது:
என் படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ் அவர்களின் நற்செயலையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்த பட்டம் அவரை ஆச்சரியப்பட வைக்கவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்தது மட்டுமில்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்றும், எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு மன்னித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு இயக்குனர் சாய்ரமணி அந்த மன்னிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார்