வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (10:34 IST)

அட ஜெண்டில்மேன் படத்துல நம்ம மொட்ட ராஜேந்திரன் – எப்படி இருக்கார் பாருங்க!

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக தற்போது இருப்பவர் மொட்டை ராஜேந்திரன்.

சினிமாவில் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டவர்களுக்கு ஒரே நாளில் வாழ்க்கை மாறிவிடக் கூடும் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் நடிகர் மொட்ட ராஜேந்திரன். எத்தனையோ ஆண்டுகளாக அவர் ஸ்டண்ட் நடிகராக இருந்தாலும், அவரை நான் கடவுள் படத்தின் மூலம் பிரபலம் ஆக்கினார் இயக்குனர் பாலா.

அதன் பின்னர் அவர் காமெடிப் பாத்திரங்களில் நடிக்க தொடங்கி வருடத்துக்கு 20 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்த பழைய படம் ஒன்றில் இருந்து அவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கரின் முதல் படமான ஜெண்டில்மேனில் அவர் ஒரு காட்சியில் இருக்கும் புகைப்படம் தான் அது. அப்போது இளமையான தோற்றத்தில் முடியோடு இருக்கும் ராஜேந்திரன் ஆள் அடையாளமே தெரியாத நிலையில் உள்ளார்.