சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்: இலியானா
சினிமா ஆசையில் இளம்பெண்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள் என்று பிரபல நடிகை இலியானா கூறியுள்ளார்.
இதுகுறித்து இலியானா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமா எனது உயிர் போன்று இருக்கிறது. ஆனால் அதிலேயே மூழ்கி விடாதே என்று எனது இதயம் சொல்கிறது. இதயம் சொல்வதைத்தான் நான் கேட்கிறேன். சினிமாவே உலகம் என்று இருக்க மாட்டேன். சினிமா நிறைய பெண்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சினிமாவில் நடித்து பெரிய கதாநாயகியாக உயர வேண்டும் என்று வெறியோடு வந்த பல இளம் பெண்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையவில்லை. அந்த பெண்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகி, வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்பதை நேரில் பார்த்து இருக்கிறேன். அவர்களை பார்த்து என்னை பக்குவப்படுத்தி உள்ளேன்.