திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (18:56 IST)

இயக்குனர் மோகன் ராஜாவின் 3 வயது மகள் கேட்ட அதிர்ச்சி கேள்வி!

மோகன் ராஜாவின் 3 வயது மகள் கேட்ட அதிர்ச்சி கேள்வி!
ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தனி ஒருவன் உள்பட பல திரைப்படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் உள்ளவர் இயக்குனர் மோகன்ராஜா. இவர் தற்போது தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க தயார் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தனது 3 வயது முதல் கடவுள் குறித்து கேட்ட ஒரு கேள்வியை தனது சமூக வலைத்தளத்தில் மோகன்ராஜா பதிவு செய்துள்ளார். தனது டுவிட்டரில் மோகன் ராஜா கூறியிருப்பதாவது: அன்று, மூன்று வயது நிரம்பிய என்‌ மகளுக்கு சாமி கும்பிட கற்றுக்கொடுத்தோம்‌. கடவுளைப்பார்த்து இரு கரம்‌ கூப்பி, அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, எல்லாரும்‌ நல்லா இருக்கணும்னு வேண்டிக்கமா என்றோம்‌. அவளும்‌ சொல்லிக்கொடுத்தது போலே அம்மா நல்லா இருக்கணும்‌, அப்பா நல்லா இருக்கணும்‌, தாத்தா நல்லா இருக்கணும்‌, பாட்டி நல்லா இருக்கணும்‌, அத்தை மாமா நல்லா இருக்கணும்‌, சித்தப்பா நல்லா இருக்கணும்‌' என கூறி தொடர்ச்சியாக சொல்லாத ஒன்றையும்‌ கூறினாள்.‌
 
'சாமி நல்லா இருக்கணும்‌: சரி தானே ! நம்மை காப்பாற்ற சாமி இருக்கு நம்மிடமிருந்து சாமியை காப்பாற்ற யார்‌ இருக்கா ?
 
மோகன்ராஜாவின் இந்த பதிவு தற்கால சூழலுக்கு பொருத்தமாக உள்ளதும், மூன்று வயது குழந்தையின் சிந்தனை எந்த அளவுக்கு உயர்ந்ததாக உள்ளது என்பதையும் ஆச்சரியப்பட்டு நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.