1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 23 பிப்ரவரி 2023 (18:18 IST)

'பகாசூரன்’ வெற்றிக்காக தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டும் மோகன் ஜி..!

mohan g
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவான 'பகாசூரன்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நல்ல வரவேற்பு பெற்றது என்பது தெரிந்தது. ஒரு சிலர் இந்த படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தாலும் இந்த படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக இயக்குனர் மோகன் ஜி களத்தில்  இறங்கி தெருத்தெருவாக போஸ்டர் ஒட்டி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. தனது படம் மக்கள் மத்தியில் கவனம் பெற வேண்டும் என்பதற்காக மோகன் ஜெயின் இந்த செயல் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே இயக்குனர் மிஷ்கின் இயக்கிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற படத்தின் போஸ்டரை ஒட்டி பரபரப்பு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த படம் குறித்து பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘பகாசூரன்’ திரைப்படம் தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருவதை கேட்க முடிகிறது, என்னுடைய நண்பர் நட்டி நடராஜ் மற்றும் இயக்குனர் செல்வராகவன் ஆகியோர்களுக்கு எனது வாழ்த்துக்கள் என தனது டுவிட்டரில் கூறியிருந்தார்.
 
 
Edited by Siva