1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 30 மே 2022 (11:22 IST)

‘திரௌபதி’ மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன்… வெளியான புதிய போஸ்டர்!

செல்வராகவன் மற்றும் நட்டி நடிப்பில் மோகன் ஜி பகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

திரௌபதி மற்றும் ருத்ர தாண்டவம் ஆகிய இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்க பட்டு வியாபார ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படங்கள். ஆனால் அந்த படத்தின் கதைக்களம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக சித்தரிக்கும் விதமாக அமைந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் சர்ச்சைக்குரிய ஒரு இயக்குனராகவே மோகன் ஜி பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில் அவரின் மூன்றாவது படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. படத்தில் நடிக்க முன்னணி நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் ஒப்பந்தம் ஆகியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதையடுத்து தற்போது படத்தின் புதிய போஸ்டரை படக்குழ் பகிர்ந்துள்ளது. மகாபாரத புத்தகம் இடம்பெற்றுள்ள அந்த போஸ்டர் இணையத்தில் கவனத்தைப் பெற்று வருகிறது.