1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 20 ஜூலை 2023 (14:04 IST)

காமிக்ஸாகாக வெளிவரவுள்ள மின்னல் முரளி!

டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் நடிப்பில் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியான மின்னல் முரளி திரைப்படம் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. சூப்பர் ஹீரோ படங்களில் வித்தியாசமாகவும் எளிமையாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த படம் இந்தியா தாண்டி உலக அளவிலும் கவனம் பெற்றுள்ளது. நெட்பிளிக்ஸில் வெளியான முதல் சில வாரங்களில் உலக டாப் 10 ல் மின்னல் முரளி இடம்பிடித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் எழுந்துள்ளது. தமிழில் இந்த படத்தின் ரீமேக் உரிமையைப் பெற சில ஹீரோக்கள் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் இப்போது மின்னல் முரளி கதாபாத்திரம் காமிக்ஸ் கதாபாத்திரமாக உருவாகியுள்ளது. இதனை மின்னல் முரளி தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். டிங்கிள் காமிக்ஸ் வழியாக இந்த காமிக்ஸ் வெளியாகும் என சொல்லப்படுகிறது.