1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 19 டிசம்பர் 2022 (16:59 IST)

குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா: வைரல் புகைப்படம்

roja boxing
குத்துசண்டை விளையாடிய அமைச்சர் ரோஜா: வைரல் புகைப்படம்
நடிகை மற்றும் அமைச்சர் ரோஜா குத்துசண்டை விளையாடிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
ஆந்திர மாநில அமைச்சர் ரோஜா சமீபத்தில் விளையாட்டு போட்டி ஒன்றை தொடங்கி வைத்தார். அந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்ட வீரர்களுக்கு பரிசளித்த அவர் அங்கிருந்த பெண்கள் உடன் குத்துச்சண்டை விளையாடினார். 
 
சுற்றியிருந்த மாணவ மாணவிகள் இருவரையும் கரகோஷம் எழுப்பி ஊக்கப்படுத்திய நிலையில் அமைச்சர் ரோஜா தனக்கு எதிராக விளையாடிய பெண்ணின் முகத்தில் குத்தியதை அடுத்து மாணவ மாணவிகள் கரகோஷம் எழுப்பினர் 
 
அமைச்சர் ரோஜா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த இடத்தில் குத்துச்சண்டை விளையாடுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே நடிகை ரோஜா கபடி போட்டியை தொடங்கிய போது கபடி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva