செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (08:06 IST)

முன்ஜாமின் கிடைத்தும் ஜெயிலில் தள்ளப்பட்ட மீராமிதுன்

மோசடி வழக்கு ஒன்றில் நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கியும் மீராமிதுன் சிறையில் அடைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
மீராமிதுன் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்னரே அவர் மீது மோசடி புகார் ஒன்று சென்னை காவல்நிலையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டது. அழகி போட்டி நடத்துவதாக கூறி தன்னிடம் ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக ரஞ்சிதா என்ற பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் குறித்து போலீசார் அவரிடம் விசாரணை செய்யும் முன்னரே அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களில் ஒருவராக சென்றுவிட்டார். மேலும் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த முன்ஜாமீன் மனு மீது நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இதனை அடுத்து மீராமிதுன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் காவல் நிலையத்தில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு தருவார் என்று அவரது தரப்பில் இருந்து நீதிமன்றத்தில் உறுதி கூறப்பட்டது
 
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடந்த டிக்டாக் என்ற டாஸ்க்கில் சரியாக மீராமிதுன் விளையாடவில்லை என அனைத்து தரப்பினரும் கருத்து தெரிவிக்கிறார். அதேபோல் இந்த வார லக்சரி பட்ஜெட் குறைந்து விட்டதற்கு சாக்சியும் காரணம் என சேரன் குற்றம்சாட்டினார். இதனை அடுத்து இந்த வாரம் சரியாக விளையாடாத சாக்சி மற்றும் மீரா மிதுன் ஆகிய இருவரையும் சிறையில் அடைக்க பிக்பாஸ் உத்தரவிட்டார். இதனையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்
 
பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே ஒரு வழக்கில் முன்ஜாமீன் பெற்று பெற்ற மீரா, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சிறையில் அடைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது