புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 2 ஆகஸ்ட் 2017 (23:43 IST)

நயன்தாரா இயக்குனரின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா

ஒரு காலத்தில் அஜித், விஜய் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்களில் ஒருவராகிய எஸ்.ஜே.சூர்யா, தற்போது முழுநேர நடிகராகிவிட்டார். விஜய்யின் 'மெர்சல்', மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர் மற்றும் செல்வராகவனின் 'நெஞ்சம் மறப்பதில்லை' என நடிகராக படுபிசியாக உள்ளார்.



 
 
இந்த நிலையில் நயன்தாரா நடித்த வெற்றி படங்களில் ஒன்றாகிய 'மாயா' படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகும் இரண்டாவது படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்திற்கு 'இறவாக்காலம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
 
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் டீசர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.