வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By J.Durai
Last Updated : திங்கள், 12 ஆகஸ்ட் 2024 (10:08 IST)

பான் இந்திய “மட்கா” படத்தின், ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார்.  இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின் மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ்  இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருட பயணத்தை காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மாறியுள்ள அவரின் இரண்டு சாயல்களைக் காட்டுகிறது.
 
போஸ்டரில் வருண் தேஜ் இளமையாகவும், துணிச்சலாகவும், சுருட்டு புகைப்பதை காணலாம். அவரது டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைல், வின்டேஜ் ஸ்டைலில் அமைந்துள்ளது. மற்றொரு தோற்றத்தில் அவர், அதே போல் சுருட்டு புகைக்கிறார் ஆனால்  அவர் இங்கே பணக்காரராகவும், வயதானவராகவும், கண்ணாடி மற்றும் நரைத்த முடியுடன் இருக்கிறார். அவரது மேஜையில் துப்பாக்கி இருக்கிறது. விளையாடும் அட்டைகளில் இருந்து, கிங் அட்டை பின்னணியாக பயன் படுத்தப்படுகிறது. மிகவும் ஈர்க்கக்கூடிய வகையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது.
 
முந்தைய காலப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 
 
இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.