1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2024 (12:27 IST)

ராஷ்மிகாவுக்கு விரைவில் டும் டும் டும்..? மாப்பிள்ளை இவரா? – இணையத்தில் தீயாக பரவும் தகவல்!

Rashmika Vijay devarakonda
பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக இணையத்தில் தகவல் தீயாக பரவி வருகிறது.



தற்போது இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளிலும் முன்னணி நாயகர்களுடன் நடித்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் 2016ம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். ஆனால் ராஷ்மிகாவுக்கு அதிகமான ரசிகர்கள் உண்டாக காரணமாக இருந்தது 2018ல் வெளியான கீதா கோவிந்தம் படம்தான். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார்.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் நெடுநாள் நண்பர்கள் என்பதால் காதல் காட்சிகளில் கூடுதலாகவே சிறப்பாக நடித்ததுடன், அவர்களது கெமிஸ்ட்ரியும் வொர்க் அவுட் ஆனது. தொடர்ந்து டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களிலும் இருவரும் இணைந்து நடித்தனர்.


தற்போது இந்தியில் ராஷ்மிகா நடித்த அனிமல் பெரும் ஹிட். அதை தொடர்ந்து புஷ்பா 2 படமும் ராஷ்மிகா நடித்த படத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் கசிந்து வருகிறது.

ராஷ்மிகாவின் நெடுநாள் நண்பரும், நடிகருமான விஜய் தேவரகொண்டாதான் மாப்பிள்ளை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில் இது ஒரு புரளியாகவே இருந்து வருகிறது. முன்னதாக ஒருமுறை ராஷ்மிகா மந்தனா லட்சத்தீவு பயணம் செய்திருந்தபோது வெளியிட்ட போட்டோவும், விஜய் தேவரகொண்டா பதிவிட்ட போட்டோவும் ஒரே இடமாக இருப்பதை சுட்டிக்காட்டி இருவரும் ஒன்றாக சுற்றி வருவதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் உலாவி வந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K