பிக் பாஸ் வக்கிர புத்தியை தூண்டும் பைத்தியக்காரங்க வீடு: பிரபல நடிகர் ஓப்பன் டாக்!

பிக் பாஸ் வக்கிர புத்தியை தூண்டும் பைத்தியக்காரங்க வீடு: பிரபல நடிகர் ஓப்பன் டாக்!


Caston| Last Modified செவ்வாய், 4 ஜூலை 2017 (15:45 IST)
நடிகர் மன்சூர் அலிகான் மனதில் பட்டதை அப்படியே அதிரடியாக பேசுபவர். இவர் தற்போது நடிகர் கமல் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அதிரடி கருத்தை கூறியுள்ளார்.

 
 
கோலிசோடா படத்தில் நடித்துள்ள கிஷோர் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் உறுதிகொள். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழ்நாடு பிக் பாஸ் பைத்தியக்காரங்க வீடு மாதிரி இருக்கிறது.
 
இந்தியாவே பெரிய பிக் பாஸ் பைத்தியக்கார வீடு தான். பிரதமர் மோடி தான் அதன் பெரிய பிக் பாஸ். அவர் வந்து ஆடுகளை முட்ட விட்டு ரத்தம் குடிக்கிறது மாதிரி இருக்கு.
 
கமல் ஒரு ஜீனியஸ் என்பதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். பக்கத்து வீட்டில் ஒரு விஷயம் நடந்தால் அதை பார்ப்பதில் ஆர்வமாக இருப்பார்கள். அதவாது சண்டை மூட்டிவிட்டு வக்கிர புத்தியை தூண்டிவிடுவது மாதிரி என்றார்.
 
மேலும் பிக் பாஸ் நடத்துவதால் தியேட்டருக்கும் வரும் கூட்டம் குறைந்துள்ளது. இதனால் சினிமா பாதிக்கப்பட கூடாது என கமலுக்கும் விஜய் டிவிக்கும் கோரிக்கை வைத்துள்ளார் மன்சூர் அலிகான்.


இதில் மேலும் படிக்கவும் :