1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2017 (13:01 IST)

எவ்வளவு துணிச்சல்?...ரேவதியை கைது செய்யுங்கள் : மனோபாலா அதிரடி

நடிகர் தனுஷின் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி படத்தை பார்த்த இயக்குனர் மற்றும் நடிகர் மனோபாலா, அப்படத்தில் நடித்த அனைவரையும் பாராட்டியுள்ளார்.


 

 
பவர்பாண்டி படம் மூலமாக, இயக்குனராக அவதாரம் எடுத்த முதல் படத்திலேயே நடிகர் தனுஷ் சிக்ஸர் அடித்துள்ளார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, முன்னணி இயக்குனர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 
 
ஏற்கனவே, இயக்குனர் ஷங்கர், கௌதம் மேனன், நடிகர் விவேக் ஆகியோர் தங்களின் டிவிட்டர் பக்கத்தில் தனுஷை பாராட்டியிருந்தனர். தற்போது நடிகர் மனோபாலாவும் பாராட்டியுள்ளார்.
 
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த அவர் “ இழந்த கலாசாரத்தை மீட்டெடுத்த தனுஷிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். முதல் படத்திலேயே இவ்வளவு துணிச்சல். தமிழ் சினிமா இயக்குனர் குடும்பத்திற்கு உங்களை வரவேற்கிறேன். பவர் பாண்டி காட்சிகளின் நேர்த்தி.. எதார்த்தம்... டேய்.. பிரசன்னா.. எங்கடா இருந்தே இவ்வளவு நாளா? இனி எங்கேயோ போகப் போற.. வாழ்த்துக்கள்.. அந்த ரேவதிய அரெஸ்ட் பண்ணுங்கப்பா.. ஹேட்ஸ் ஆப் ராஜ்கிரண்..” என அவர் குறிபிட்டுள்ளார்.
 
ப.பாண்டி படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருவது அப்படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது...