வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauvery Manickam
Last Modified: செவ்வாய், 4 ஜூலை 2017 (19:23 IST)

வெற்றிக்காக காத்திருக்கும் மஞ்சிமா மோகன்..

விக்ரம் பிரபு ஜோடியாக நடித்த ‘சத்ரியன்’ படம் தோல்வியைத் தழுவியதால், வெற்றிக்காக காத்திருக்கிறார் மஞ்சிமா மோகன்.


 

 
கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில், சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். அந்தப் படம் நல்ல பேரை அவருக்கு வாங்கிக் கொடுத்தாலும், சமீபத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக நடித்து வெளியான ‘சத்ரியன்’, அந்த நல்ல பேரை நாறடித்துவிட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ என்ற ஒரு படம் மட்டுமே கைவசம் இருக்கிறது.
 
போஸ்ட் புரொடக்‌ஷன் நடைபெற்று வரும் அந்தப் படத்தைத்தான், மலை போல நம்பியிருக்கிறாராம் மஞ்சிமா. அந்தப் படம் சக்சஸ் ஆனால் மட்டுமே, அடுத்தடுத்து பெரிய படங்களில் வாய்ப்பு கிடைக்கும். எனவே, அந்தப் படம் கமர்ஷியலாக சக்சஸ் ஆகவேண்டும் என வேண்டிக் கொண்டிருக்கிறார் மஞ்சிமா மோகன்.