அஜித்தா? விஜய்யா? மஞ்சிமா மோகன் பளிச் பதில்!!
தமிழ் சினிமாவில் சிம்புவுக்கு ஜோடியாக கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார் மஞ்சிமா மோகன்.
தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக சத்ரியன் படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ் சினிமா நடிகைகள் அனைவருக்கும் விஜய் அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இந்த ஆசை பற்றி மஞ்சிமாவிடம் கேட்கப்பட்டது. சிறிது நேரம் யோசனையின் பின்னர், எனக்கு அஜித் சார் மீது நிறைய மரியாதை உள்ளது ஆனால், எனக்கு விஜய் சாருடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை உள்ளது என தெரிவித்தார்.