திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (18:38 IST)

மணிரத்னம் புதிய படத்தின் பர்ஸ்ட்லுக்

மணிரத்தினம் இயக்கும் புதிய படமான செக்க சிவந்த வானம் படத்தின் பர்ஸ்ட்லுக் தற்போது வெளியாகியுள்ளது.

 
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.
 
"செக்கச்சிவந்த வானம்" எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன் (STR), விஜய்சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, 
 
ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
 
வரும் 12ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.