வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (07:54 IST)

தக் லைஃப் கிளைமேக்ஸ் காட்சியைப் படமாக்கும் மணிரத்னம்!

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் 'தக் லைஃப்'  படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் கமல்ஹாசன், சிம்பு திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், சிம்பு, அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.  ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மணிரத்னம் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் டெல்லி, ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் நடந்த நிலையில் பின்னர் சென்னையில் செட் அமைக்கப்பட்டு முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டன.  அடுத்த கட்டமாக முக்கியக் காட்சிகளுக்காக கோவாவுக்கு செல்ல உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது இந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் படக்குழு சென்னையில் செட் அமைத்து படமாக்கி வருகிறது. இதில் கமல் மற்றும் சிம்பு ஆகியோர் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.