செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2025 (07:24 IST)

இந்த காலத்தில் குடும்பம் நடத்துவதே சாகசம்தான்- ‘குடும்பஸ்தன்’ மணிகண்டன்!

தமிழ் யுட்யூப் சேனல்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்று நக்கலைட்ஸ். இவர்கள் வெளியிடும் அரசியல் நய்யாண்டி வீடியோக்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். ஏற்கனவே இந்த சேனலில் இருந்து தனம் அம்மாள், பிரசன்னா,  ஜென்சன் உள்ளிட்ட நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகியுள்ளார்கள்.

இந்நிலையில் இப்போது இந்த குழுவினர் இணைந்து உருவாக்கும் குடும்பஸ்தன் படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்துள்ளார். அவரோடு முக்கியக் கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம் மேக்னா சான்வே கதாநாயகியாகவும், இயக்குனர் சுந்தர்ராஜன், குரு சோமசுந்தரம், தனம் அம்மா, பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர், நிவேதிதா, அனிருத் ஆகியோர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

படம் ஜனவரி 24 ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல பாராட்டைப் பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி பேசியுள்ள நடிகர் மணிகண்டன் “இயக்குனர் முதலில் சாகசக் கதை ஒன்றைதான் படமாக்க எண்ணினார். ஆனால் இந்த காலத்தில் குடும்பம் நடத்துவதே சாதனைதான் என்பதால் அதையே படமாக்கியுள்ளார். நான் என் வாழ்நாளில் அதிகமாக சண்டை போட்ட நபர்களில் இயக்குனர் ராஜேஷ்வரும் ஒருவர். ஆனால் அதெல்லாமே படத்தின் நன்மைக்காகதான் என்பதை இருவருமே புரிந்து கொண்டுள்ளோம். இந்த படம் அனைவருக்கும் கனெக்ட் ஆகும் விதமாக உருவாகியுள்ளது.” எனப் பேசியுள்ளார்.