வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 9 நவம்பர் 2016 (17:59 IST)

மணிரத்னம் எடுத்த அபூர்வ முடிவு

மணிரத்னம் ஒருசிலரைப் போல் தனது படங்களின் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகள் செல்பவர் அல்ல. ஆனால், காற்று வெளியிடை படத்திற்காக அவர் வெளிநாடு செல்லவுள்ளார்.

 
கார்த்தி, அதிதி ராவ் நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, சென்னை, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. பாடல் காட்சியை அவர் இமாச்சல பிரதேசத்தில் எடுப்பதாகத்தான் இருந்தது. சில பிரச்சனைகள் காரணமாக அது முடியாமல் போக, தற்போது ஐரோப்பாவில் உள்ள பனி மலைசிகரங்களின் அடிவாரத்தில் எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
எந்த நாடு, எப்போது பயணம் முதலானவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.