1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (16:06 IST)

மணிரத்னம் படத்தின் பெயர் வெள்ளைப்பூக்கள்

மணிரத்னத்தின் புதிய படத்துக்கு வெள்ளைப்பூக்கள் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


 
 
கடல் படத்தின் பிரமாண்ட தோல்விக்குப் பின், ஓ காதல் கண்மணி படத்தை இயக்கினார் மணிரத்னம். படம் சுமாராகப் போனது. அதையடுத்து துல்கர் சல்மான், கார்த்தி, கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் நடிப்பில் ஒரு படத்தை ஆரம்பிப்பதாக இருந்தார். படப்பிடிப்பு தள்ளிப் போனதால் துல்கர் சல்மான் விலக, அவருக்குப் பதில் நானி ஒப்பந்தம் செய்யப்பட்டார். கீர்த்தி சுரேஷும் கால்ஷீட் இல்லை என்று படத்திலிருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதில் மணிரத்னம் யாரை தேர்வு செய்யப் போகிறார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்தப் படத்துக்கு வெள்ளைப்பூக்கள் என பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார்.