1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 4 மே 2016 (10:21 IST)

மணிரத்னம் படத்தில் விமானியாக நடிக்கும் கார்த்தி

மணிரத்னம் படத்தில் விமானியாக நடிக்கும் கார்த்தி

மணிரத்னத்தின் புதிய படத்தில் கார்த்தி விமானியாக நடிக்கிறார். அதற்காக அவர் சில வாரங்கள் பயிற்சி எடுக்கவிருப்பதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 
 
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிக்கின்றனர். 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இந்தப் படத்தில் கார்த்தி வெளிநாட்டுவாழ் இந்தியராக வருகிறார். விமானியான அவர் இந்தியாவில் உள்ள மருத்துவர் அதிதி ராவை காதலிப்பதுதான் கதை என கூறப்படுகிறது.
 
கார்த்தி, விமானிகள் எப்படி நடந்து கொள்வார்கள். எப்படி விமானத்தை இயக்குவார்கள் என்பது போன்றவற்றை அறிந்து கொண்ட பின் ஜுனில் படப்பிடிப்பை ஆரம்பிக்கின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்