திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 அக்டோபர் 2022 (10:29 IST)

மலையாளத்தில் கால் பதிக்கும் ஜோதிகா; அதுவும் மம்முட்டியுடன்…!

நடிகர் மம்முட்டி மற்றும் நடிகை ஜோதிகா காதல் – தி கோர் எண்ணும் படத்தில் இணையவுள்ளனர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.


தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள் மற்றும் பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான மம்முட்டி தமிழ் திரையுலகின் மற்றொரு முக்கிய நடிகையான ஜோதிகாவுடன் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார். இப்படத்திற்கு காதல் - தி கோர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை மலையாள திரையுலகில் முக்கிய பங்கு வகிக்கும் இயக்குநர் ஜியோ பேபி இயக்குகிறார்.

நேற்று ஜோதிகாவின் பிறந்தநாளை முன்னிடு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யாவும் தனது டிவிட்டரில் பதிவிட்டு வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். மம்முட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பனி வழங்கும் இப்படத்தை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் பால்சன் ஸ்கரியா எழுதியுள்ளனர். சாலு கே தாமஸ் ஒளிப்பதிவு, ஃபிரான்சிஸ் லூயிஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். மேத்யூஸ் புலிகன் இசையமைக்கிறார்.

இயக்குநர் ஜியோ பேபி தனது தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். 2 பெண்குட்டிகள், குஞ்சு தெய்வம் மற்றும் சுதந்திரப் போராட்டம் உட்பட அவரது பிற படைப்புகளையும் வழங்கியுள்ளார். மம்முட்டி கம்பனியால் சமீபத்தில் தயாரிக்கப்பட்ட உளவியல் த்ரில்லரான ரோர்சாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மலையாள சினிமாவில் இதற்கு முன்பு ராக்கிளிப்பட்டு, சீதா கல்யாணம் போன்ற படங்களின் டப்பிங் வெர்ஷன்களில் மட்டுமே ஜோதிகா நடித்துள்ளார். மலையாளத்தில் இதுவே அவரது முதல் நேரடி படமாகும்.
 
Edited By: Sugapriya Prakash